ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்கூட்டியே சொன்னது ஏன்? எதிரிகளை முழுமையாக வீழ்த்த வேண்டும்.
“1971 போரை ஆபரேஷன் சிந்தூர் உடன் ராஜ்நாத்சிங் ஒப்பிட்டார். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் அரசியல் தலைமையிடம் முழு துணிச்சல் இருந்தது. 1971ல் ஜெனரல் மனோக் ஷாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திர காந்தி முழு சுதந்திரம் அளித்தார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தன பலனாக பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. ஆனால், இப்போது நடந்ததே வேறு!
இந்திய ராணுவத்திற்கு இழப்பு ஏற்படவில்லை என தைரியம் இருந்தால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும். இந்திராகாந்தி போல் தைரியம் இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது பொய் என மோடியால் கூறமுடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.