Wednesday, February 11, 2026

இறால் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?

கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களில் பெரும்பாலானோருக்கு இறால் மிகவும் பிடித்தமான உணவாகும். முள் இல்லாததால் குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம். இறாலில் கொழுப்புச் சத்து சற்றே அதிகமாக இருப்பதால் சிலர் அதை தவிர்க்கிறார்கள். ஆனால் சரியான அளவில், குறிப்பாக வாரத்தில் ஒருமுறை எடுத்துக் கொண்டால், இறால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

இறால் கடல் உணவுகளில் மிகவும் சுவையானதாகக் கருதப்படுகிறது. இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உயர்தர புரதம், செலீனியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Also Read : கெட்ட கொழுப்பு அதிகமா இருந்தா உடலில் இந்த உறுப்புக்கள் எச்சரிக்கை செய்யும்

இறாலில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மையுள்ள பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களை எதிர்த்து செயல்படுகின்றன. மேலும், செலீனியம் அதிகமாக உள்ளதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இறாலில் உள்ள செலீனியம் மற்றும் கரோட்டினாய்டுகள் சருமத்தில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களை கட்டுப்படுத்தி சருமத்தை பாதுகாக்கின்றன. மேலும், நல்ல கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.

Also Read : சாப்பிட்ட உடனே நெஞ்செரிச்சல் வருதா? இதெல்லம் தான் காரணம்

இறாலில் உள்ள ஹெபாரின் என்ற மூலப்பொருள் கண் பார்வை சிதைவு ஏற்படாமல் தடுக்கும். இது கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

இறால் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் உள்ளது. உண்மையில், இறாலில் கார்போஹைட்ரேட் இல்லை. கலோரிகள் குறைந்த அளவிலேயே இருப்பதால் எடை அதிகரிக்காது. நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இறால் உதவியாக இருக்கும்.

Related News

Latest News