ரத்த தானம் செய்வது உடலை பலவீனமாக்குமா..? உண்மை என்ன தெரியுமா..?

215
Advertisement

ஜூன் 14ஆம் தேதியான இன்று உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.ரத்த தானம் செய்ய நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். ஆரோக்கியமாக உள்ள எந்தவொரு ஆணும், பெண்ணும் ரத்ததானம் செய்யலாம்.

ரத்த தானம் உடலைப் பலவீனமாக்கும் என்பது தவறான புரிதல். வயது வந்தவரின் உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின் போது 450மில்லிலிட்டர் ரத்தம் மட்டுமே உடலில் இருந்து எடுக்கப்படும். ஆரோக்கியமான ஒருவரின் உடல் இந்த ரத்தத்தை 24 முதல் 48 மணி நேரத்தில் மறு உற்பத்தி செய்துவிடும்.

ரத்த தானம் செய்யும் போது புதிய ரத்தம் மற்றும் ரத்த செல்கள் உருவாவது உடலில் முடுக்கிவிடப்படுகிறது. எனவே ரத்த தானம் செய்வதால் ஏற்படும் ரத்த இழப்பு ஓரிரு நாளில் ஈடுசெய்யப்படும்.

ரத்த தானம் செய்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும்,தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வது மாரடைப்பை தடுக்கிறது.இவை தவிர்த்து, ரத்த தானம் செய்வது உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதை வேகப்படுத்துகிறது.