நாகை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதிக தொப்பை இருந்ததால் நடைபயிற்சி மேற்கொண்டு தனது தொப்பையை குறைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தொப்பை குறையாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது, ஸ்கேன் எடுத்துப் பார்த்த பொழுது அந்தப் பெண்ணின் கர்ப்பபைக்கு அருகே கட்டி ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 11 கிலோ எடையுள்ள சினைப்பை கட்டியை எந்தவித பாதிப்பும் மருத்துவர்கள் அகற்றினார்.