கருவில் உள்ள பிறக்காத குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்!

114
Advertisement

விஞ்ஞானத்தில் மனிதர்கள் பல புதுமையான சாதனைகளைச் செய்து வருகிறார்கள்,

அதுபோல மருத்துவத் துறையில் மனித குளத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது , இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மருத்துவக் குழு , தாயின் கருப்பையில் உள்ள பிறக்காத குழந்தை ஒன்றுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.


கருவிலிருந்த குழந்தைக்கு Venus of Galen malformation என்ற சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இது மூளையில் நரம்பு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தி, குழந்தை பிறந்த உடனேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சூழ்நிலையை உண்டாகும், மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சியடையாத போது இந்த சிக்கல் ஏற்படுகிறது, எனவே குழந்தை பிறந்தப் பிறகு அதன் உயிருக்கு ஆபத்து என்பதால், கருவில் இருக்கும் போதே 10 நபர்கள் கொண்ட மருத்துவக் குழு,

நீண்ட ஊசியை அல்ட்ராசோனோகிராபி மூலம் தாயின் வயிற்றில் செலுத்தி இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். தற்போது அந்த குழந்தை பிறந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.


இந்த நோய் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் கருவிலேயே இறந்துவிடும், ஆனால் இந்த குழந்தைக்கு உள்ள நோயை முன்னதாகவே கண்டறிந்தால் அதனைக் காப்பாற்ற முடிந்தது என்று சொல்லப்படுகிறது எனவே பிறக்காத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததால் இது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.