வயது மூப்பை முழுமையாக தவிர்க்க முடியாது என்றாலும், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் தள்ளிப்போட முடியும்.
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் ரத்தத்தில் ஆக்சிஜென் ஓட்டத்தை குறைத்து முக சுருக்கங்கள் மற்றும் பல வயதாகும் அறிகுறிகளை அதிகப்படுத்தி காட்டும்.
அதே நேரம், எண்ணெயில் பொறித்த நொறுக்கு தீனியை தவிர்த்து ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, தோல் மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருப்பதால், இளமையான தோற்றத்தை பெறலாம்.
மஞ்சளில் உள்ள நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, செல்களை பாதுகாப்பதால் உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வது அவசியம்.
வயது மூப்பு சார்ந்த நோய்களை தடுக்கும் EGCG என்ற உட்பொருள் green teaயில் இருப்பதால், green tea குடிப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்ல பலன்களை தரும்.
நம் செல்களின் ஆயுளை அதிகரிக்கும் ரெஸ்வெராட்ரால் என்னும் என்சைம் உள்ள வேர்க்கடலை, திராட்சை, கொக்கோ மற்றும் டார்க் சாக்லேட் ஆகிய உணவுகளை சேர்த்து கொள்வது மேம்பட்ட உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதுடன், வயது மூப்பின் தீவிரத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது.
இரத்தம் மற்றும் திசுக்களில் உள்ள சருமத்தை வெயிலிடம் இருந்து பாதுகாக்க கூடிய லைகோபீன், தக்காளி மற்றும் தர்பூசணி பழங்களில் அதிக அளவில் உள்ளன.
மேற்குறிப்பிட்ட உணவு பொருட்களை தொடர்ந்து உட்கொள்வது, சீரான உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய நடைமுறையை கடைப்பிடித்தாலே, உடலை சுறுசுறுப்பாக இயங்க வைத்து இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.