சீனாவில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நுகர்வோர் மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள், மேலும் அரசாங்கமும் வணிகங்களும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கின்றன. அந்த வகையில், பொது கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் பயன்பாட்டையும், விளம்பரங்களையும் இணைத்துள்ளனர்.
அதாவது, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சீனா இன்சைடர் @chinainsider என்ற கணக்கில் இருந்து ஒரு வீடியோ பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவால் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். அதில் ஒரு பெண் டாய்லெட் பேப்பரை பெற ஒரு விளம்பரத்தைப் பார்க்க வேண்டியிருந்தது.
தரவுகளின் படி, கழிப்பறைகளுக்குள் நுழைந்த பிறகு டாய்லெட் பேப்பர் வேண்டுமென்றால், டிஸ்பென்சரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், பயன்படுத்தியோரின் மொபைல் போனில் ஒரு சிறிய விளம்பரம் காட்டப்படும். அந்த விளம்பரம் முடிந்த பின், டாய்லெட் பேப்பர் மெஷினில் இருந்து வெளியே வரும். இதனை விரும்பாதவர்கள் அதாவது, விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்த 0.5 யுவான் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதை குறித்து சீன அதிகாரி கூறுகையில்; பொது கழிப்பறைகளில் மக்கள் அதிகமாக டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவதாகவும், இதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.எனினும், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த புதிய விதிக்கு கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.