Wednesday, December 17, 2025

உங்கள் போனுக்கு 100% பாதுகாப்பு வேணுமா? இப்பவே இதை மாத்துங்க

தற்போதைய சூழலில், ஹேக்கர்களிடம் இருந்து போனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இல்லையேல் வங்கி தகவல்கள் மட்டுமின்றி நம்முடைய தனிப்பட்ட தகவல்களும் திருடப்படும் சூழல் ஏற்படுகிறது. உங்கள் மொபைலில் ஒரு சில செட்டிங்ஸ்- ஐ மாற்றுவதால் இந்த ஆபத்தை தடுக்க முடியும்.

Usage & Diagnostics

செட்டிங்களில் (Settings > Google > Google Services > All Services) சென்று, Usage & Diagnostics ஆப்ஷனை Disable செய்யுங்கள். இது உங்கள் போனில் நடக்கும் செயல்களை கூகுள் கிளவுட் சேகரிப்பதை முடக்கி, ஹேக்கிங் ஆபத்தை குறைக்கும்.

Digital Wellbeing-ல் Usage Data Access அனுமதியை நிறுத்தவும்

Settings > Digital Wellbeing & Parental Controls > Settings > Usage Data Access சென்று, Allow Permission-ஐ Disable செய்யுங்கள். இதனால் சில ஆப்கள் உங்கள் போன் பயன்பாட்டு தகவல்களை பின்னணியில் சேகரிக்க முடியாது.

Digital Wellbeing-இல் Customization Services-ஐ நிறுத்தவும்

அதே Digital Wellbeing பகுதியில் Customization Services-ஐ Turn Off செய்யுங்கள். இதனால் உங்கள் போன் தேவையற்ற தகவல்களை பகிர்வதை நிறுத்தி, ஹேக்கிங் வாய்ப்பை மேலும் குறைக்கும்.

இந்த மூன்று முக்கிய மாற்றங்களையும் செய்தால், உங்கள் போனில் உள்ள தகவல்கள் திருடப்படாமல் இருக்கும். வங்கி தொடர்பான தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். ஹேக்கர்கள் உங்கள் போனுக்குள் நுழைய முடியாது. மேலும் உங்கள் போன் 100% பாதுகாப்பாக இருக்கும்.

Related News

Latest News