Thursday, December 25, 2025

UPI யூஸ் பண்றீங்களா? ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!

சட்டுன்னு ஒரு அவசரத்துக்கு பண பரிமாற்றம் செய்யணும்னா அதுக்கு UPI Transaction தான் correct என்றாகிவிட்டது. தெருமுனை கடை முதல் சூப்பர் மார்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனை தான் இன்று கொடிகட்டி பறக்கிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI கூறியது போல, ஒரு செகண்டுக்கு சுமார் 7,000 பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் காரணமாக, UPI சேவையில் பல புதிய விதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன.

நீங்கள் UPI மூலம் பண பரிவர்த்தனைகள் செய்கிறீர்கள் என்றால், ஆகஸ்ட் 1, 2025 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. உதாரணமாக PhonePe, Google Pay, Paytm போன்ற பண பரிமாற்றத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை இனி பின்பற்ற வேண்டும்.

வருகின்ற ஆகஸ்ட் 1 முதல், ஒவ்வொரு UPI App-லும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டும் பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும். மேலும் இனி, 2 மணி நேரத்தில் அதிகபட்சம் 3 முறை மட்டும் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்கலாம். இதில், இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையே குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும். மட்டுமல்லாமல் ஒரு பரிவர்த்தனை முடிந்ததும், அதை Check செய்ய 45 முதல் 60 நொடிகள் வரை காத்திருந்து பார்க்க வேண்டியது முக்கியம்.

மேலும் ஆகஸ்ட் 1 முதல் Autopay Payment பரிவர்த்தனைகள் காலை 10 மணிக்கு முன்னரும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி பிறகு மட்டுமே செய்ய முடியும். மட்டுமல்லாமல் உங்கள் மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை இப்போது ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் வரவிருக்கின்றன.

Related News

Latest News