தற்போது இருக்கும் இளைஞர்கள் மட்டும் மல்லாமல் அனைவர்களும் ஸ்மார்ட்போன்களுடன், இயர்போன்கள் மற்றும் இயர்பட்கள் இன்றைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.இசையைக் கேட்பதற்கும், அழைப்புகளை ஏற்பதற்கும் அல்லது ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்பதற்கும் இயர்போன்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.
இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் இரவில் பாடல்களைக் கேட்டு தூங்குவது பழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் விளைவாக, இயர்போன்கள் காதுகளில் அதிக நேரம் தங்கிவிடுகிறது. இருப்பினும், அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அழுக்கு இயர்போன்களின் ஆபத்துகளைப் பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்!!
அழுக்கு இயர்போன்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வைத்திருக்கும். காதில் உள்ள ஈரப்பதமான மற்றும் சூடான சூழல் இந்த நுண்ணுயிரிகள் வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலும், இயர்போன்களுக்குள் நுழைந்தவுடன், இந்த பாக்டீரியாக்கள் காதில் நுழைந்து காது தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். வெளிப்புற ஓடிடிஸ், தோல் தொற்று போன்ற காதுகளில் தொற்றுகள் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், கேட்கும் திறனையும் பாதிக்கலாம். மேலும், இயர்போன்களை சுத்தம் செய்யாமல் நீண்ட நேரம் பயன்படுத்தினால், காதில் அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள்.
சமீபத்தில் நடந்த்ய ஆய்வுவின் படி, இயர்போன்களில் சேரும் மெழுகு, வியர்வை மற்றும் அழுக்கு பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஒருவர் இயர்போன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் இந்தப் பிரச்சனை மோசமடைகிறது. மற்றவர்களின் இயர்போன்களைப் பயன்படுத்துவதால் ஸ்டேஃபிளோகோகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்கள் பரவுவதற்கு வழிவகுக்கிறது. இதனால் காது தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சரி, இந்தப் பிரச்சனைகளிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று கேட்குறீங்களா?
நீங்கள் பயன்படுத்து, இயர்போன்களை தவறாமல் சுத்தம் செய்வது முக்கியம். ஆல்கஹால் நனைத்த மென்மையான துணியால் இயர்போன்களை சுத்தம் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு இயர்பட்களை சுத்தம் செய்து உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.
குறிப்பாக, மற்றவர்களின் இயர்போன்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும், அதிக அளவில் இசையைக் கேட்காமல் இருப்பதும் காது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இயர்போன்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
“ஆரோக்கியமே செல்வம்” என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம், நமது காதுகளின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது உடலின் முழு ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு.