Thursday, April 24, 2025

இ-வாகனங்களை பயன்படுத்துகிறீர்களா? தமிழ்நாடு மின்சார வாரியம் கொண்டு வரும் அதிரடி திட்டம்?

நடப்பு நாட்களில் இ-வாகனங்கள் உலகம் முழுவதிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை, இந்தியாவின் “டெட்ராய்டு” என அழைக்கப்படுவதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிரமாக முன்னெடுக்கவுள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சார்ஜிங் மையங்களை அமைக்கும் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரைவில் நடைபெற இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இ-வாகனங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியாக, 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது. இந்த பாயிண்டுகள், சாலை ஓரங்களில் உள்ள அரசு நிலங்களில் அமைக்கப்படவுள்ளன. மின்சார வாரியம் சார்பாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சார்ஜிங் பாயிண்டுகள், மக்கள் பயன்பாட்டின்படி விரைவில் அதிகரிக்கப்படுவதாகவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில், இ-வாகனங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன, ஆனால், இந்த எண்ணிக்கையை 100க்கு மேல் உயர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஒப்பந்தங்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு, கட்டுமான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் பாஸ்ட் சார்ஜர்களின் நிலவரம் பின்வருமாறு உள்ளது: டெல்லியில் 21, குஜராத்தில் 53, ஹரியாணாவில் 2, கர்நாடகாவில் 10, கேரளாவில் 30, மகாராஷ்டிராவில் 13, மேகாலயாவில் 1 மற்றும் தமிழ்நாட்டில் 13 பாஸ்ட் சார்ஜர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 100க்கு மேல் உயர்த்துவதற்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார வாகனங்களின் பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக அண்மையில் ‘கோ எலக்ட்ரிக்குப்’ பிரச்சாரத்தை நடத்தியது. இந்த நிகழ்வுகள், சென்னை மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்றன. இதன் மூலம், மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டை குறைப்பதும், பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளை மிச்சப்படுத்துவதும் எப்படி சிறந்தது என்பதை மக்களுக்கு விளக்கப்பட்டது.

இதன் பின்வரியாக, மத்திய அரசு, நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டம் 6,000 கிலோமீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலைகளை மின்சார வாகனங்களுக்கு ஏற்றதாக மாற்றும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான திட்டத்தை அடுத்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

Latest news