திண்டுக்கல்லில், அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் 64 பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் 115 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 66,000 குடும்ப அட்டைகள் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரேஷன் கார்டு பெற, நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு ஸ்மார்ட் கார்டு விண்ணப்பப்பு செய்யும் விருப்பம் உள்ளது.
ரேஷன் கார்டு நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்படாது; முதலில் தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு சோதனை செய்து, பின்னர் உங்கள் ரேஷன் கடைக்கு அனுப்பப்படும், அதற்கான தகவல் SMS மூலம் வழங்கப்படும்.