மருத்துவத்தில் பயன்படுத்தும் இந்தக் கீரையைத் தெரியுமா?

353
Advertisement

அன்றாட உணவில் பல கீரைகள் சமைத்து
உண்ணப்பட்டாலும், சத்து நிறைந்த ஒரு
கீரை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

சத்து நிறைந்த இந்தக் கீரை வெந்தயக் கீரை.

வெந்தயத் தழைதான் வெந்தயக் கீரை.
வெந்தயம் விதைகளின்மூலம் பயிரிடப்படுகிறது.

வெந்தயக் கீரைகளில் வைட்டமின் ஏ சத்தும்,
தாது சத்துகளும், சுண்ணாம்புச் சத்தும் நிறைந்து
உள்ளன. இதனால் இதை உண்போர் மார்பு
அடைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள்.

பார்வைக் குறைபாடு, சொறிசிரங்கு, இரத்த
சோகை, வாதம் போன்ற பிரச்சினைகளும் நீங்கும்.

அகோரப் பசியும் வெந்தயக் கீரை உண்பதால்
கட்டுப்படுத்தப்படுகிறது. குடல்புண்களும்
குணமாகின்றன. வயிற்று நோய்களையும்
குணப்படுத்துகிறது.

மூலநோய் உள்ளவர்கள் வெந்தயக் கீரை
சாப்பிட்டால் விரைவில் குணம்பெறலாம்.

வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்
காச நோய் குணமாவதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வெந்தயக் கீரையை சமைத்து
உண்டுவந்தால் நீரிழிவு கட்டுப்படுவதாக
மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமான ஆற்றலை அதிகப்படுத்தி பசியைத்
தூண்டுவதாகவும் சொல்கின்றனர்.

உடல் வீக்கம், வயிற்று வலி, சீதபேதி போன்ற
சிக்கல்களைக் களைகிறது வெந்தயக் கீரை.

வெந்தயக் கீரையுடன் வெண்பூசணிக்காயை
சாம்பாரில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால்
பெருத்த உடல் இளைக்கும். இரத்த விருத்தியும்
உண்டாகும்.