Thursday, May 8, 2025

குளுகுளு Ice Cream ஜில்லுனு இப்படி ஒரு கதை இருக்கிறது தெரியுமா??

ஐஸ்கிரீம் என்பது பால், கிரீம், சர்க்கரை போன்றவற்றுடன் சுவை மற்றும் நிறமூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்படும் ஒரு சிற்றுண்டியாகும்.

இவைகளில் பலவைகள் உள்ளன..
அதாவது வெண்ணிலா ஐஸ்கிரீம், சாக்லேட் ஐஸ்கிரீம், புளிச்சின ஐஸ்கிரீம், பீச் ஐஸ்கிரீம், பனானா ஐஸ்கிரீம், காபி ஐஸ்கிரீம், மஸ்ஸஸ் ஐஸ்கிரீம், மோர்ஸஸ் ஐஸ்கிரீம், ரோஸ் ஐஸ்கிரீம், கொய்யா ஐஸ்கிரீம், தேங்காய் ஐஸ்கிரீம், உம்கரி ஐஸ்கிரீம்என பல வகைகள் இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், ஐஸ்கிரீமுக்கு ஒரு வரலாறு இருக்கிறது, அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..

அதாவது ஐஸ்கிரீமின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. கி.மு. 550 இல் பெர்சியாவில் ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகள் தயாரிக்கப்பட்டன.. சீனாவில் இருக்கும் டாங் வம்சத்தினர் பனிக்கட்டி இனிப்பு வகைகளை தயாரித்தனர், மற்றும் ரோமானியப் பேரரசர் நீரோ தேன் கலந்த குளிர்பானங்களை அனுபவித்தார்.

பண்டைய மெசபடோமியாவில், அரச தின்பண்டங்களுக்காக பிசைந்த பழங்களுடன் பனி கலக்கப்பட்டது, மேலும் பண்டைய எகிப்தியர்கள் லெபனான் மலைகளில் இருந்து நொறுக்கப்பட்ட பனியை பழச்சாறுகளுடன் பரிமாறினர்.

1553 ஆம் ஆண்டில், இத்தாலிய கேத்தரின் டி மெடிசி {de Medici} பிரான்சின் இரண்டாம் ஹென்றியின் மனைவியாக ஆனபோது, பிரான்சுக்கு இது போன்ற உறைந்த இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஐஸ்கிரீம் கோனை 1896 இல் இட்டாலோ மார்ச்சியோனி கண்டுபிடித்தார். 1920 களில், முதல் ஐஸ்கிரீம் பார் கண்டுபிடிக்கப்பட்டது…
ஐஸ்கிரீம் 16-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் இருந்ததாக கூறப்படுகிறது.பின்னர் 17-ஆம் நூற்றாண்டில், ஐஸ்கிரீம் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாகி, பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்பட்டது.. ஆனால் முதலில் பழங்களை வைத்துமட்டுமே தயாரித்தது என்பது ஆசிரியமே..ஆனால் தற்போது ஐஸ்கிரீம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். இவை பொதுவான தகவல்கள் அடிப்படையில் கொண்டு உருவாக்கப்பட்டது..

Latest news