முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துவிட்டது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் என்னென்ன? பலரும் அறிந்திராத அந்த சுவாரஸ்யமான தகவல்களைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஜனநாயக நாட்டில் மக்கள் பணியாற்றும் பிரதிநிதிகளுக்கு மாத ஊதியமும் பல்வேறு படித் தொகைகளும் வழங்கப்படுவது வழக்கம். எம்.பி-க்களுக்கான ஊதியம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், எம்.எல்.ஏ-க்களின் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2008-ல் வெறும் 30 ஆயிரம் ரூபாயாக இருந்த சம்பளம், படிப்படியாக உயர்ந்து 2011-ல் 55 ஆயிரம் ரூபாயானது. பின்னர் 2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் அதிரடியாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுவே இப்போதும் நடைமுறையில் உள்ளது.

இதில் மிக முக்கியமாக, முதலமைச்சர் விஜய்யின் மாதச் சம்பளம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது தவிர, முதலமைச்சருக்கு அரசு சார்பில் வீடு, கார் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சாதாரண எம்.எல்.ஏ-க்களுக்கு மாத ஊதியமாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதில் அடிப்படைச் சம்பளம் என்பது வெறும் 30 ஆயிரம் ரூபாய் தான். மீதமுள்ள தொகை அனைத்தும் பல்வேறு படிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது தொகுதிப் படி 25 ஆயிரம் ரூபாய், வாகனப் படி 25 ஆயிரம் ரூபாய், மாதாந்திரப் படி 10 ஆயிரம் ரூபாய் எனப் பட்டியல் நீள்கிறது. இது தவிரத் தொலைபேசி செலவு, அஞ்சல் செலவு எனப் பலவற்றிற்கும் தனித்தனியாகத் தொகை ஒதுக்கப்படுகிறது. அமைச்சர்களுக்குக் கூடுதலாக அரசு வீடும் காரும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் மட்டுமல்லாமல் சலுகைகளும் ஏராளம். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்படுவதோடு, அவர்கள் விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். மேலும், அவர்கள் தங்களது தொகுதியில் ஓர் அலுவலகத்தை நிர்வகிக்கவும், ஒரு உதவியாளரைத் தனிப்பட்ட முறையில் வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் முடியும். இதற்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.

இது தவிர, சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்கும் நாட்களுக்குத் தினசரி படியாகத் தலா 2,500 ரூபாயும் அவர்களுக்குக் கூடுதலாக வழங்கப்படுகிறது. மக்கள் பணியாற்றும் பிரதிநிதிகளுக்கு அரசு வழங்கும் இந்த ஊதியம் மற்றும் சலுகைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

Related News

Latest News