உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு தளமான யூடியூப், இன்று தவிர்க்க முடியாத தளமாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யூடியூப் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் வீடியோ அதாவது 2 கோடி வீடியோக்கள் youtube தளத்தில் அப்லோட் செய்யப்படுவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இதேபோன்று நாள் ஒன்றுக்கு பத்து கோடி கமெண்டுகள் சராசரியாக யூடியூப்பில் செய்யப்படுகின்றன. உலகளவில் யூடியூப் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 6 பில்லியன் மணிநேரத்துக்கு மேல் வீடியோக்களை பார்க்கிறார்கள்.
சவுதி அரேபியாவில் டிவி, பேஸ்புக், ட்விட்டர் தடை இருந்தாலும், யூடியூபிற்கு தடை விதிக்கப்படவில்லை. பிரபலமான பாடல் வீடியோக்கள், இசை போன்றவை யூடியூப்பில் மிகவும் பிரபலம்.