Friday, August 15, 2025
HTML tutorial

35 ஆயிரம் பேர் மட்டும் கூட வேண்டிய சின்னசாமி மைதானத்தில் எத்தனை பேர் கூடினார்கள் தெரியுமா?

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிகொண்டாடத்தில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். ஒரு கட்டத்தில் நுழைவு வாயில்களை உடைத்துக்கொண்டும், தாண்டி குதித்தும் ரசிகர்கள் விளையாட்டு அரங்குக்குள் நுழைய முயன்ற போதுதான் அந்த சம்பவம் நடந்தது. இதில் இதில் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

சின்னசாமி அரங்குக்குள் வெறும் 35 ஆயிரம் பேர்தான் கூட முடியும். ஆனால் அங்கு 3 லட்சம் பேர் கூடியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி, அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்துக்கு அதுவும் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டது மிகப்பெரிய தவறாகக் கருதப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News