மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது தெரியுமா?

253
Advertisement

இட்ஸ் வெரி சிம்பிள்.

இரும்புக்கும் காந்தத்துக்கும் இடையேயுள்ள
கவர்ச்சி விசை நமக்குத் தெரிந்ததுதானே.

இந்தக் கவர்ச்சி விசை அடிப்படையில்தான்
மெட்டர் டிடெக்டர் செயல்படுகிறது.

மெட்டல் டிடெக்டரின் வாயில் பகுதியில் வளைவு
நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இவ்வழியாக நபர்கள்
உள்ளே செல்லும்போது வளைவில் மின்கம்பிச் சுருள்
சுற்றப்பட்டு மின்னோட்டத்தில் இருக்கும்.

இரும்பு போன்ற உலோகங்களையோ ஆயுதங்களையோ
உடலில் மறைத்துக்கொண்டு இந்த மெட்டல் டிடெக்டர் வளைவு
வழியாகச் செல்லும்போது மின்னோட்டத்தில் சுருள் இருப்பதால்
உலோக ஆயுதம் மின்காந்தப்புலம் பெறுகிறது.

இது எந்திரத்தால் கண்டறியப்பட்டு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
இப்போது இரும்பில்லாத வெடிகுண்டு தீ மற்றும் ஆல்கஹால்
போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் நடைமுறையில் உள்ளன.