இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான CERT-In (Indian Computer Emergency Response Team), நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அதிமுக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களின் இயங்குதளத்தில் (Operating System) பல முக்கியமான பாதுகாப்புப் பிழைகள் (Vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களுக்கு எதிராகப் பெரும் மோசடிகளைச் செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசாங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் பாதிக்கப்படலாம். இன்றைய சந்தையில் உள்ள பெரும்பாலான புதிய மாடல்கள் இந்த OS பதிப்பைக் கொண்டுள்ளதால், ஒரு பெரிய பயனர் சமூகம் ஆபத்தில் உள்ளது.
சாம்சங், ஒன்பிளஸ், ரியல்மி, ரெட்மி, சியோமி, ஒப்போ, விவோ, மோட்டோரோலா மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல பிரபலமான நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.
CERT-In இன் ஆலோசனைகள்:
உடனடியாக உங்கள் சாதனத்தை சமீபத்திய பாதுகாப்பு அப்டேட்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
போனின் “Settings” > “About Phone” அல்லது “Software Update” பகுதியைச் சரிபார்த்து வழங்கப்பட்ட அப்டேட்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அப்டேட் பிறகு சாதனத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
வெளியில் உள்ள தெரியாத மூலங்களிலிருந்து செயலிகள் அல்லது இணைப்புகளை தவிர்க்க வேண்டும்.
Google Play Protect இனை செயல்படுத்தி பாதுகாப்பு ஸ்கேன் செய்யவும்.
இந்த பாதுகாப்புப் பிழைகள் அனுமதித்தால், ஹேக்கர்கள் நமது சாதனங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி முக்கியமான தகவல்களை திருடவும், தீங்கிழைக்கும் மென்பொருள்களை நிறுவவும், சாதனத்தை முடக்கவும் (Crash) முடியும். எனவே அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் தங்கள் சாதனங்களை விரைந்து பாதுகாப்பு அப்டேட்டுகளை செய்துகொள்ள வேண்டும்.
