ஒரு ரூபாய்த் தாளைக்கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்…எப்படித் தெரியுமா?

333
Advertisement

உங்களிடம் ஒரு ரூபாய்த் தாள் இருக்கிறதா…?

ஆம் எனில், அதைக்கொண்டு பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்….

வாருங்கள், எப்படியெனப் பார்ப்போம்…

பல லட்சங்கள், கோடிகள் முதலீடு சம்பாதிப்பது ஒருவிதம்… ஒரே ஒரு ரூபாய்த் தாளைக்கொண்டு பல லட்சங்கள் சம்பாதிப்பது புதுவிதம்…

பொதுவாக, பழைய பொருட்கள் கலைப்பொக்கிஷங்களாகி விடுகின்றன. அந்த வகையில், நம்நாட்டின் பழைய ஒரு ரூபாய்த்தாளும் கலைப்பொருளாக விளங்குகிறது. விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கு இந்தக் கலைப்பொருளும் ஒரு வழியாகியுள்ளது.

இந்தியாவின் பணமான ரூபாய்த் தாள்கள் அனைத்திலும் இந்திய ரிசர்வ் வங்கிக் கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், ஒரு ரூபாய்த் தாள்களில் மட்டும் இந்திய நிதித்துறைச் செயலாளரின் கையெழுத்து இருக்கும். இந்த ஒரு ரூபாய்த் தாள்கள் பழங்காலக் கலைப்பொருட்களாகக் கருதப்படுகிறது. அவற்றுக்கு சர்வதேசச் சந்தையில் மிகப்பெரிய மதிப்பு உள்ளது.

அவற்றை சர்வதேசச் சந்தையில் ஏலம் அடிப்படையில் விற்பனை செய்வதற்கென்றே பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று நீங்கள் அனைவரும் அறிந்த OLX இணைய தளம். இதில், உங்களின் ஐடி மூலம் LOGIN செய்து கலைப்பொருட்களை ஏலம் விடலாம். அல்லது Indiamart.com இணைய தளத்தில் நீங்கள் ஒரு ஐடியை உருவாக்கி உங்கள் பணத்தின் புகைப்படத்தைப் பதிவிட்டும் ஏலமிடலாம்.

அதைப் பார்த்து வாங்க விரும்புவோர் உங்களைத் தொடர்புகொள்வர். இருவரும் பேசி முடிவுசெய்து கொள்ளலாம்.

இந்தியாவின் ஒரு ரூபாய்த் தாள் முதன்முதலில் 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. அந்த ஒரு ரூபாய்த் தாள்களில் 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 1926 ஆம் ஆண்டில் ஒரு ரூபாய்த் தாள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. 1940 ல் மீண்டும் அச்சடிக்கப்பட்டது. மறுபடியும் 1994ல் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. பிறகு, மறுபடியும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அச்சிடப்பட்டுப் பொது மக்களின் புழக்கத்திற்கு வந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.