Sunday, July 20, 2025

போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் இருக்கா? உடனே இதை பண்ணுங்க

மக்கள் பணத்தை சேமிக்க உதவும் வகையில் தபால் நிலையங்கள் பல வகையான சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இப்போது இந்தக் கணக்குகளில் உள்ள பணத்தைப் பாதுகாக்க ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, முதிர்வு தேதிக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் தபால் கணக்குகள் மூடப்படாவிட்டால் அல்லது நீட்டிக்கப்படாவிட்டால், அவை முடக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. செயலற்ற கணக்குகள் மோசடிக்குள்ளாவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு முடக்கப்பட்டால் பணம் டெபாசிட் / விலக்கு செய்ய முடியாது ஆன்லைன் சேவைகள் முடக்கப்படும் பரிவர்த்தனைகள் தடை செய்யப்படும்.

முதலில், தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும். முடக்கப்பட்ட கணக்கு பாஸ்புக் அல்லது சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். மொபைல் எண், பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது முகவரிச் சான்று போன்ற KYC ஆவணங்களை வழங்கவும்.

உங்கள் கணக்குகள் செயலிழக்காமல் இருக்க, அவற்றை நேரத்தில் புதுப்பிக்கவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news