PF கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் ரூ.7 லட்சம் பணம் இலவசமா கிடைக்கும்!

இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வுக்கால சேமிப்பிற்காக EPF கணக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த கணக்கு சேமிப்பு மட்டுமல்ல, ஊழியர்களுக்கு பல மறைமுக நன்மைகளையும் வழங்குகிறது. அதில் பெரும்பாலோருக்கு தெரியாத முக்கிய சலுகை — EPFO வழங்கும் இலவச உயிர்காப்பீடு.

பிஎப் கணக்குள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.7 லட்சம் வரை லைப் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு என்று சொல்லப்படும் EDLI அதாவது Employees’ Deposit Linked Insurance திட்டத்தின் மூலம் தானாகவே வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது, இந்த காப்பீட்டுக்காக ஊழியர்கள் எந்தவித பிரீமியமும் அல்லது கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. PF கணக்கு இருப்பதே இந்த பாதுகாப்பு கிடைக்கும் அடிப்படைத் தகுதி.

EDLI திட்டம், EPF மற்றும் EPS ஆகியவற்றுடன் இணைந்த மூன்றாவது முக்கிய நன்மையாக கருதப்படுகிறது. இதற்கு எந்த தனிப்பட்ட பதிவு, படிவம் அல்லது விண்ணப்பமும் தேவையில்லை. ஊழியரின் சம்பளத்தின் 0.5% அளவை நிறுவனம் EDLI நிதிக்குச் செலுத்தும்.

இது ஊழியரின் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படுவதில்லை. இந்த காப்பீடு, ஊழியர் பணியில் இருக்கும் காலத்தில் உயிரிழந்தால் மட்டுமே செயல்படும். வேலை நேர விபத்து நடந்தாலும், வீட்டில் இருந்தபோதோ அல்லது விடுமுறையின்போதோ நிகழ்ந்தாலும், இறந்தவரின் குடும்பத்தினர் அல்லது நாமினிக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

EDLIயின் கீழ் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சமும், அதிகபட்சம் ரூ.7 லட்சமும் வழங்கப்படும். இது ஊழியரின் கடைசி 12 மாத ஊதியம் மற்றும் PF இருப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான இந்த EDLI சலுகை பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளது.

எனவே PF கணக்கு வைத்திருப்பவர்கள், நாமினி விவரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது மிக அவசியம். குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்காக EPFO வழங்கும் இந்த இலவச காப்பீடு முக்கிய பங்காற்றுவதால் பெரிய உதவியாக இருக்கும்.

Related News

Latest News