Friday, June 20, 2025

ரொட்டிய இனிமேல் சாப்டுவீங்களா?

தந்தூரி ரொட்டியில் எச்சிலைத் துப்பிய சமையல்காரரின் வீடியோ வெளியாகி திகைக்க வைத்துள்ளது.

வைரலாகியுள்ள அந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் உள்ள தந்தூரி உணவகம் ஒன்றில் 2021 ஆம் ஆண்டு (அக்டோபர் 17 ஆம் தேதி) செல்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரொட்டி தயாரிப்புக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த உணவகத்தில் சமையல்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் ஈடுபடுகின்றனர்
ஒருவர் மட்டும் தந்தூரி சுடுவதில் ஈடுபட்டுள்ளார்.

அந்த சமையல்காரர் தனது கையால் ரொட்டி மாவைத் தட்டி சுடத் தயாரானதும் அதில் எச்சில் துப்பி அடுப்பில் வைக்கிறார். ஒவ்வொரு ரொட்டியையும் அவ்வாறே எச்சில் துப்பி வேக வைக்கிறார். அங்குள்ள பணியாளர் எவரும் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாப்பிட வந்த வாடிக்கையாளர்களோ உணவகத்தின் முன்பகுதியில் இருந்ததால், சமையல் கூடத்தைக் கவனிக்கவில்லை. ஆனால், யாரோ ஒருவர் மட்டும் சமையல் கூடத்தின் பின்பகுதியிலிருந்து இந்தச் செயலை தனது செல்போன் கேமராவால் எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அது மின்னலென்ற வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் எச்சில் துப்பிய சமையல்காரர் மீது கடுமையான நடவடிக்கை வலியுறுத்தியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் பணிபுரிந்தது சிக்கன் உணவகம் எனக் காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

சில மாதங்களுக்குமுன்தான் ரஸ்க் தயாரிக்கும் கூடத்தில் அதனைப் பேக் செய்செய்த நபரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது அதைப்போன்றே ஓர் அருவறுக்கத்தக்க சம்பவம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க சில உணவகங்கள் தங்கள் சமையற்கூடங்களை வாடிக்கையாளர்கள் அனைவரும் பார்க்கும்படியாகக் கண்ணாடிக் கூண்டு போட்டு அமைத்துள்ளன. என்றாலும், ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்வோர் உணவு சுகாதாரமான முறையில் தயார்செய்யப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news