இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வேலை செய்யும் மக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதி பாதுகாப்பை தரும் மிக முக்கிய அமைப்பு தான் EPFO எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
EPF கணக்கில் பணம் சேமிக்கின்றோம், ஆனால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க — e-KYC அப்டேட் பண்ண வேண்டியது இப்போது கட்டாயம்! ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், உங்கள் PF கணக்கு பாதுகாப்பாக இருக்க, KYC அப்டேட் பண்ணுவது மிகவும் அவசியம்.
அப்படியெனில் எப்படி அப்டேட் செய்வது தெரியுமா?
முதலில், EPFO வலைதளமான epfindia.gov.in என்பதற்குள் செல்லுங்கள்.
அங்கே “For Employees” என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும்.
உங்களிடம் இன்னும் UAN இல்லை என்றால், ஆதார் எண், பான் மற்றும் வங்கிக் கணக்கை இணைத்து புதிய UAN உருவாக்கலாம்.
இப்போது, லாகின் ஆன பிறகு மேலே உள்ள “Manage” டேப்புக்கு போங்க.
அதில் உள்ள KYC என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில், நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் ஆவணங்களை தேர்வு செய்யலாம்:
ஆதார், பான், வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்றவை.
ஒவ்வொன்றற்கும், டாக்குமெண்ட் எண் மற்றும் அதில் உள்ளபடியே பெயரை சரியாக எடுத்து பதிவு செய்யுங்கள்.
பிறகு, “Save” பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அப்போது “KYC pending for approval” என்ற ஸ்டேட்டஸ் வரும்.
உங்கள் முதலாளி அதை ஒப்புதல் அளித்ததும், அது “Digitally approved KYC” என்று மாறும்.
அப்டேட் முடிந்ததும், உங்கள் மெயிலுக்கு ஒரு உறுதிப்படுத்தல் வரும்.
இதெல்லாம் செய்தால் தான் EPFO கணக்கில் பணம் வைக்கவும், எடுக்கவும் எந்த தடையும் இருக்காது. அதனால், இந்த e-KYC அப்டேட்டை இப்போதே செய்து விடுங்கள்!