Thursday, May 8, 2025

இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு போக வேண்டாம் : சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news