தினசரி உணவில் காய்கனிகள் மற்றும் பழங்கள்
சேர்ப்பது உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும்
உதவுகிறது.
காய்கறிகளை சமைப்பதற்காகத் தயார்செய்யும்போதும்,
சமைக்கும்போதும் பெருமளவில் சத்துகள் வீணாக்கப்படுகின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேல்தோலை நீக்கும்போது
தோலின் அடியிலுள்ள மினரல் சத்துகள் நீக்கப்படுகிறது.
எப்படித் தெரியுமா…?
சத்துகள் நிறைந்தவை கேரட் இலைகள், பீட்ரூட் இலைகள்,
முட்டைக்கோஸ் மேல்பகுதி ஆகியவை. இவை சமைக்கும்போது
வீணாக்கப்படுவதால் சத்துகள் வீணாகின்றன.
சில வகைக் காய்கனிகளை வேகவைத்தபின், வேகவைத்த
நீரை வெளியே கொட்டுவதால் காய்கனிகளிலுள்ள விட்டமின்
சத்துகள் வெளியேறி வீணடிக்கப்படுகின்றன.
காய்கனிகளிலுள்ள சோடியம், பொட்டாசியம், குளோரின்
போன்ற மினரல் உப்புகளும் சமைத்த நீரைப் பயன்
படுத்தாததால் வீணாகின்றன.
காய்கனிகளை நறுக்கிய பின்பு காற்றுப்பட வைத்திருப்பதால்
விட்டமின் சி வீணாகிறது.
சமைக்கும்போது அதில் சமையல் சோடா சேர்ப்பதால்
விட்டமின் பி சத்துகள் குறைந்துவிடுகின்றன.
சத்துகள் குறையாமல் தடுக்க இப்படிச் செய்யலாம்…
காய்கறிகளை நறுக்கிய பின்பு கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.
நறுக்கும் முன்பே காய்கறிகளை நன்கு கழுவவேண்டும்.
காய்கறிகளைப் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கினால்…
அவற்றைக் கழுவும்போதும் சமைக்கும்போதும் விட்டமின்
சத்துகள் வீணாவது குறையும்.
காய்கறிகளின் தோலை சீவுவதற்குத் தோல் சீவும் கருவியைப்
பயன்படுத்தலாம். தோல் சீவும் கருவியைப் பயன்படுத்தி
காய்கறிகளை நறுக்குவதால் சத்துகள் வீணாவதில்லை.
சமைப்பதற்குப் போதுமான அளவு மட்டுமே தண்ணீரைப்
பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் நன்றாகக் கொதித்தபின்பே காய்கறிகளைப்
போட்டு சமைப்பது சிறந்தது.
காய்கறிகளை இட்லி வேகவைப்பதுபோல் ஆவியில் வேக
வைத்தால் சத்துகள் வீணாகாது. பிரஷ்ஷர் குக்கர் மூலம்
வேகவைத்தாலும் காய்கறியிலுள்ள சத்துகள் வீணாகாது.
காய்கறிகளை வேகவைக்கும்போது சமையல் சோடா
சேர்க்கக்கூடாது. சமையல் சோடா சேர்த்தால் விட்டமின்
சத்துகளை இழக்க நேரிடும்.
இனி, இந்த வழிமுறைகளைப் பின்பற்றி சமைத்து சத்தான
உணவைச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாகத் தெம்பாக வலம்
வாருங்கள். உடல் ஆரோக்கியம்தானே நமது முதல் சொத்து.