திருப்பூர் அருகே மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய திமுக பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிச்சாமி. இவர் காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று ஜீப்பில் சென்றுள்ளார்.
அப்போது கருகம்பாளையம் பள்ளி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த கோர விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.