Monday, February 10, 2025

“நாளைல இருந்து ஒரு கடை இருக்காது” – அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா கலையரங்கம் அருகே கடந்த 25 ஆம் தேதி மாலை திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது

அப்பொழுது திடீரென் திமுக கட்சியை சேர்ந்த சங்கரன் பாளையம் பகுதி செயலாளர், முரளி கிருஷ்ணன் மற்றும் ஓல்ட் டவுன் பகுதி செயலாளர் சுந்தர் விஜய் மற்றும் வேலூர் தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் கடையை எடுக்கச் சொல்லி தகராறு செய்தனர்.

கடையை அகற்றவில்லை என்றால் இனி இந்த இடத்தில் கடை வைக்க விடமாட்டோம் என தரக்குறைவான வார்த்தையில் பேசி திமுக ஆட்சியில் அராஜகப் போக்கில் செயல்படுவதாக கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்

இதே இடத்தில் பல கட்சி சேர்ந்தவர்கள் கட்சிக் கூட்டம் நடத்தி உள்ளார்கள். ஆனால் எங்க கடையை யாரும் அகற்ற சொன்னதில்லை. ஆனால் இந்த திமுக கட்சியினர் மட்டுமே எப்போதெல்லாம் கட்சி கூட்டம் போடுகிறார்களோ அப்போதெல்லாம் எங்கள் கடையை அகற்ற சொல்கிறார்கள்.

நாங்கள் நாள்தோறும் இரவு நேரத்தில் சாலையோர உணவுக் கடை போடுவதற்கு முறையாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்று பல வருடமாக வியாபாரம் செய்து வருகின்றனர். இதே போக்கு நீடித்தால் அடுத்த கட்டமாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அனைத்து தரைகடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Latest news