Friday, December 26, 2025

திமுக SIR-ஐ எதிர்க்கவில்லை : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்

SIR-ல் இருந்து அ.தி.மு.க-வினரின் வாக்குரிமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காப்பாற்றப்போவதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பல்வேறு கட்சியினர் கூறி வருவதாக தெரிவித்தார்.

திமுக SIR-ஐ எதிர்க்கவில்லை என்றும், சரியாக செய்ய வேண்டும் என்றே கூறுவதாக விளக்கம் அளித்தார். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் 30 நாட்களில் பல கோடி மக்களுக்கு, எவ்வாறு SIR பணியை மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

Related News

Latest News