Friday, March 14, 2025

பிரதமர் மோடியை எதிர்த்து பேசக்கூடிய ஒரே கட்சி திமுக தான் – அமைச்சர் KKSSR. ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து பேசக்கூடிய ஒரே கட்சி திமுக தான் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மும்மொழி கொள்கையை நம் மீது மத்திய அரசு திணிக்கிறது என்று குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து பேசக்கூடிய ஒரே கட்சி திமுக தான் என்றும் கூறினார்.

Latest news