Friday, July 4, 2025

“98.5 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் பேட்டி

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

சென்னை அனகாபுத்தூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கூறுகையில், ‘’ 98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்சனை உள்ளது.

மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. பிறகு ஏன் அனகாபுத்தூரில் வெளியேற்ற நடவடிக்கையினை அரசு எடுக்கிறது’’ என வேதனைத் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news