புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தொடங்கியது. புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
அப்போது குடிநீரில் கழிவுநீர் கலந்தது குறித்து அவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அவையில் முழக்கமிட்டு சபாநாயகரை சூழ்ந்து கோஷமிட்டனர்.
இதையடுத்து புதுச்சேரி சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
