சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள திமுக,அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சியிலிருந்து சி.எஸ்.ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்கள் உற்சாகத்துடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இதில் நகரத் தலைவர் சந்திரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.