அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.
இந்த விடுமுறை மூலம் அரசு பொது கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.