Wednesday, July 23, 2025

நான்-ஸ்டிக் பாத்திரங்களை இப்படி பயன்படுத்தினால் ஆபத்து உறுதி

நான் ஸ்டிக் பாத்திரங்களில் டெஃப்லான் (Teflon) மற்றும் பெர்புளுரோகார்பன்(PFAS, PFOA) போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. இவை உடலுக்கு சில ஆரோக்கியப் பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதால், சமையல் மற்றும் சுத்தம் மிகவும் சுலபமாகிறது. மேலும், சமையல் போது எண்ணெய் அளவு குறைக்கப்படுவதால், உடல் எடைக் குறைக்கும் நோக்கமுள்ளவர்களுக்கும் இது ஒரு நன்மையாகும்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக வெப்பநிலையில் (300°C க்கும் மேல்) பயன்படுத்தும் போது இந்த பாத்திரங்களில் உள்ள டெஃப்லான் பூச்சுக்கள் உடைந்து, நச்சுப்புகைகளை வெளியிடும் அபாயம் உள்ளது. இது சுவாசத்தை பாதிக்கும்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியவை அல்ல. எனவே பாதுகாப்பையும் நீடித்த பயன்பாட்டையும் உறுதி செய்ய,பாதிரங்களை குறைந்த வெப்பத்தில் மட்டும் பயன்படுத்தி, தோசை உள்பட உலோக கரண்டிகளை தவிர்த்து மரக்கரண்டிகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆற்றல் மற்றும் வசதியில் சிறந்தவை என்றாலும், பராமரிப்பு குறைவானது, அதிக வெப்பம், மற்றும் கீறல் போன்ற காரணிகளுக்காக தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை பாதுகாப்பாக, மென்மையான கரண்டிகளுடன் மற்றும் குறைந்த வெப்பத்தில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news