Wednesday, April 2, 2025

Viral பெண்ணுக்கு வாய்ப்பளித்த ‘இயக்குனர்’ பாலியல் வழக்கில் அதிரடி ‘கைது’

உத்தர பிரதேச நிகழ்வில் கவனம் பெற்றவர் இளம்பெண் மோனாலிசா. பாசிமணி, ருத்ராட்ச மாலைகளை விற்ற இவர் யூடியூபர்களின் கண்களில் பட, அவரை உலக Famous ஆக்கிவிட்டு தான் ஓய்ந்தனர். கவர்ந்து இழுக்கும் கண்களால் ‘காந்த கண்ணழகி என்றும், எளிமையான அழகால் Beauty Queen என்றும் ரசிகர்கள் விதவிதமாக இவரை பட்டப்பெயர்கள் சூட்டி அழைத்தனர்.

இதையடுத்து பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தன்னுடைய அடுத்த படத்தில் மோனாலிசா தான் நாயகி என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான ஒப்பந்தத்தில் மோனாலிசாவும் கையெழுத்து போட்டிருந்தார். கையோடு அவருக்கு 1 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் ஆக தூக்கிக்கொடுத்த சனோஜ், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்தார்.

இந்தநிலையில் இயக்குனர் சனோஜ் மிஸ்ராவை பாலியல் வழக்கில், போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 28 வயது இளம்பெண் ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளாக சனோஜ் குடும்பம் நடத்தி, 3 முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.

தற்போது இளம்பெண் டெல்லியின் கரிநபீம் காவல் நிலையத்தில் சனோஜ் மீது புகார் அளிக்க, புகாரின் அடிப்படையில் போலீசார் சனோஜைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார், ”இளம்பெண் கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே சனோஜ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் மோனாலிசாவின் சினிமா எதிர்காலம் தற்போது கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

Latest news