Monday, January 26, 2026

‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குனர் காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி

மதயானைக் கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.

மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவுப் பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பொல்லாதவன். கொடிவீரன் படத்திலும் நடித்துள்ளார்.

Related News

Latest News