Thursday, January 16, 2025

கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன்…

பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இந்திய பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.


இயக்குநர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். தன் ஐடி கார்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நேற்று துவங்கியது. மே 27ம் தேதி வரை நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் கலந்துகொண்டுள்ளார். தன் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கேன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கேன்ஸ் விழாவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் கேன்ஸில் இருந்து எடுத்த சில புகைப்படங்களையும் போஸ்ட் செய்துள்ளார். விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல.

Latest news