Sunday, February 15, 2026

விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – இயக்குனர் மிஷ்கின்

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிராகன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது அவரிடம் திரையில் அவரது புகைப்படத்தைக் காட்டி இவரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் எனக் கேட்டனர். அதற்கு மிஷ்கின் ‘விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்’ எனக் கூறியுள்ளார்.

மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News