Wednesday, August 13, 2025
HTML tutorial

கூலி படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான பதிவு

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகிறது. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கூலி படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது : கூலி படம் எப்போதும் என் திரை பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். இந்த படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம் ரசிகர்கள் தலைவர் மீது வைத்த அன்பே.

இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்தப் படம் மற்றும் படம் தவிர்த்து நாம் பகிர்ந்து கொண்ட உரையாடல்களை எப்போதும் மறக்க மாட்டேன். இவை நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றி மறக்க முடியாத தருணங்கள்.

50 வருடங்களாக எங்களை தொடர்ந்து ஊக்குவித்து, உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுடன் வளரவும் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News