Wednesday, April 2, 2025

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறினார் அனுராக் காஷ்யப்

பாலிவுட்டின் பிரபல டைரக்டர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பையை விட்டு வெளியேறினார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன.

தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுராக் காஷ்யப், அதன் பிறகு விடுதலை-2 லியோ, காஷ்மோரா மற்றும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பாலிவுட் சினிமாக்கள் ரூ. 1000 கோடியை ஈட்ட வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டு வருவதால் அவை நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், பாலிவுட் சினிமா மற்றும் மும்பையிலிருந்து விலகுவதாக அனுராக் காஷ்யப் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news