Friday, May 9, 2025

அம்பானி கிட்ட ‘காசு’ வாங்கிட்டீங்களா? இஷான் கிஷனை ‘வெளுக்கும்’ ரசிகர்கள்!

ஏப்ரல் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் மோதின. மும்பைக்கு Play Offஐ உறுதி செய்யக்கூடிய போட்டி என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் ஆரம்பம் முதலே போட்டி ஒன்சைடாக போய்விட்டது. முதலில் பேட்டிங் செய்த SRH 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 143 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் சேஸிங் செய்த மும்பை 15.4 ஓவர்களிலேயே இலக்கினை எட்டி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தநிலையில் ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன், மும்பை அணியிடம் விலை போய்விட்டதாக ரசிகர்கள் அவரை, சமூக வலைதளங்களில் வறுத்து வருகின்றனர். போட்டியின் 3வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட கிஷான் விக்கெட் கீப்பரிடம், கேட்ச் கொடுத்ததாக நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ரிவியூ எதுவும் கேட்காமல் அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே, இஷான் வேகமாக பெவிலியன் திரும்பி விட்டார். பின்னர் ஸ்னிக்கோ மீட்டரில் சோதனை செய்தபோது, பந்து இஷானின் பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” இஷானோட விசுவாசம் எப்போவுமே மும்பைக்கு தான். அம்பயர், கிரிக்கெட் வீரர்கள்னு எல்லாருமே விலை போயிடறாங்க,” என்று, கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இஷான் வெளியேறிய போது கேப்டன் ஹர்திக், அவரின் தலையில் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.

போட்டிக்கு பின்னர் உரிமையாளர் நீதா அம்பானியும் இஷானை, செல்லமாக கன்னத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news