Thursday, August 28, 2025
HTML tutorial

திமிங்கலத்தின் இந்தச் செயலைக் கவனித்தீர்களா?

ராட்சதத் திமிங்கலம் ஒன்று படகைத் தள்ளும்
வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மேக்ஸி ஜோனஸ் என்ற வாலிபர் அண்மையில் இந்த
வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரோன் கேமராமூலம் இதனைப் பபடமாக்கியுள்ளார்.

அந்த வீடியோவில், அர்ஜென்டினா நாட்டின் கடலில் பெண்
ஒருவர் துடுப்புப் படகில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருக்க,
அதிர்ச்சியூட்டும்விதமாக அங்கு வந்த திமிங்கலம்
அப்படகைத் தனது துடுப்பால் தள்ளி உதவிசெய்கிறது.

இந்த ஆனந்தக் காட்சி தற்போது நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

அர்ஜென்டினாவைப் பொருத்தவரை மே மாதம் முதல்
டிசம்பர் மாதம் வரை திமிங்கலங்கள் இடம்பெயர்ந்து செல்லும்.
அந்தத் தருணங்களில் அவை கடற்கரையோரம் வந்துசெல்லும்.
அப்படி வந்துசெல்லும்போதுதான் பரவசப்படுத்தும்
இந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News