சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? உடனே இதை பண்ணுங்க

ஈரான் போரின் தாக்கம் காரணமாக மேற்காசிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால இடைவெளியும் மாற்றப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் இடைவெளி நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பலர் முன்பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும், முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஒரு மாற்று தீர்வாக மினி சிலிண்டர்கள் உதவுகின்றன. பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் மற்றும் இண்டேன் கேஸ் நிறுவனங்கள் தங்களது மினி சிலிண்டர்களை வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்கின்றன. இவை 5 கிலோ எடையுடைய சிறிய சிலிண்டர்கள் ஆகும்.

இந்த மினி சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய தேவையில்லை. நேரடியாக கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். மேலும், இவை சிறிய அளவில் இருப்பதால் பைக் போன்றவற்றில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதற்காக முகவரி சான்று தேவையில்லை. ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வழங்கினால் போதும்.

இந்த சிலிண்டர்கள் தடையற்ற வணிக எல்பிஜி வகையை சேர்ந்தவை. அதனால், ஒரு இடத்தில் வாங்கி மற்றொரு இடத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. எரிவாயு காலியானதும், பழைய சிலிண்டரை கொடுத்து புதியதை பெறலாம். இது குறிப்பிட்ட கேஸ் ஏஜென்சிகளில் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் கிடைக்கிறது.

வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் கிடைக்காத சூழ்நிலையில் அவசர தேவைக்கு இது நல்ல மாற்று தீர்வாக செயல்படுகிறது. தற்போது இந்த மினி சிலிண்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

Related News

Latest News