ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினாரா தோனி.?

248
Advertisement

ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோனி 60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதாக வெளியான தகவல் போலியானது என தெரியவந்துள்ளது.

ஒடிசாவில் நடந்த கோரமான இரயில் விபத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது.

இரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரும் தொகையை நிவாரணமாக வழங்கியதாக பல செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி ஓடிசா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தாருக்கும் 60 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இந்த நிலையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.

அதன்படி ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 கோடியோ அல்லது பெரிய தொகையோ நிதியுதவியாக அளிப்பதாக எம்எஸ் தோனி ஒருபோதும் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.