Saturday, April 26, 2025

திரைமறைவில் ‘தில்லாலங்கடி’ வேலை Rishab Pantஐ ‘ரிஜெக்ட்’ செய்த CSK?

இந்த 2025ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தோற்பதற்கு, ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்காதது தான் காரணம் என்று, சரமாரி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெமிங் இருவரும் இதை மறைமுகமாக ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போதைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்டை, ஏலத்தில் எடுக்கும் முடிவில் இருந்த CSK, கடைசி நேரத்தில் பின்வாங்கியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

நான் சென்னை அணிக்கு வர வேண்டும் என்றால், எனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று, ரிஷப் டிமாண்ட் செய்தாராம். ஆனால் ஏற்கனவே ருதுராஜை கேப்டனாக அறிவித்து விட்டதால், மும்பை போல சென்னையிலும் உள்குத்துகள் நடக்கலாம் என்று, பண்டின் கோரிக்கையை சென்னை ரிஜெக்ட் செய்து விட்டதாம்.

இதையடுத்து தான் லக்னோ அணி, இவரை ஏலத்தில் 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி கேப்டனாக நியமித்துள்ளது. தோனி போலவே ரிஷப்பும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அதோடு தோனியின் சிஷ்யராகவும் வலம் வருகிறார்.

இதனால் கடந்த சில வருடங்களாகவே ரிஷப் பண்ட், CSKவில் இணையப் போகிறார் என்று செய்திகள் அடிபட்டன. இதனால் ரசிகர்களும் சமூக வலைதளங்களில், மஞ்சள் ஜெர்ஸியை ரிஷப்பிற்கு அணிவித்து அழகு பார்த்து வந்தனர். ஆனால் பண்டின் டிமாண்ட் காரணமாக, அத்தனையும் வெறும் கனவாகவே போய்விட்டது.

Latest news