தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது என நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.