Friday, July 25, 2025

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

விமானப் பாதுகாப்பு, கேபின் பணியாளர்கள் பணி நேரம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் தொடர்பான மீறல்களுக்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற விமானம் வழியில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு கட்டிடத்தின் மீது மோதியதில் 260 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து ஏர் இந்தியா கடுமையான ஒழுங்குமுறை கண்காணிப்பில் உள்ளது.

இதில் விமானங்களுக்கான பயிற்சி மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளில் கூடுதல் குறைபாடுகள் பதிவாகியுள்ளன. பல நீண்ட தூர மற்றும் உள்நாட்டு விமானங்களில் பணியாளர் ஓய்வு விதிமுறைகள் மற்றும் பயிற்சி நெறிமுறைகளில் மீறல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news