தலைவரின் மகனாக இருந்தாலும், நிறைய கடந்து சாதித்துள்ளார் CM படக்கண்காட்சியில் SK நெகிழ்ச்சி!

56
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தியாகமே அவரை உயர்த்தியுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி சென் ஜோசப் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் கண்காட்சியை நேரில் கண்டு களித்தார்.  பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகப்பெரிய உயரங்களை அடைவதற்கு பல வலிகளையும், தியாகங்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி உணர்த்துவதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் பல சவால்களை கடந்து, சாதனைகளைப் புரிந்துள்ளார் என புகழாரம் சூட்டினார். புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் கும்பிட்டவாறே உள்ள குட்டிக் குழந்தை புகைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.