வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதே போல் டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
